மாமன்னன் படக்குழுவை பாராட்டிய நடிகர் ரஜினியின் பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக விளங்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பாராட்டி திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மாமன்னன் திரைப்படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்.

இவரது இந்த பதிவிற்கு, “சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்” என்று கூறி உதயநிதி ஸ்டாலின் பதில் பதிவு அளித்திருக்கிறார். இவர்களது இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.