தனுஷ் பதிவிற்கு ரீ-ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் மாறி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதியான நாளை திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது எனக் குறிப்பிட்டு படகுழுவினர் அனைவரையும் பாராட்டி பதிவிட்டு இருந்தார். இதற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது’ எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனுஷின் பதிவிற்கு ரீ-ட்வீட் செய்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.