தளபதி 68 படத்தில் விஜயுடன் இரண்டு நடிகர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இல்லையோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன், ஜோதிகா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆமாம் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா மற்றும் மற்றும் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன்  ஆகியோர் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் வைரல் ஆகி வரும் இந்த தகவல் படத்தில் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.