Two Captains for The Indian Team : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

Two Captains for The Indian Team :

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்பு வரை சூப்பர் டூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததையடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து உச்சநீதி மன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் தோல்வி மற்றும் வீரர்கள் செயல்பாடு பற்றி விளக்கம் கேட்க இருக்கிறது.

மேலும் அதில் வரும் 2023 உலகக்கோப்பைக்கு எப்படி தயாராகுவது. அதற்கு செய்ய வேண்டியது என்னென்ன? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றோடு வெளியேறியது.

அதன்பின் ஒருநாள் போட்டிக்கான அணியில் பல மாற்றங்கள் செய்து ஆட்டமுறையை மாற்றியது. அதன் பயனாகவே தற்போது அந்த அணி உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

அதுபோலவே 2023 உலகக்கோப்பைக்கான ஒருநாள் அணியை தற்போதில் இருந்து உருவாக்க பிசிசிஐ விரும்புகிறது.

மேலும், அரையிறுதிக்குப் பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வீரர்கள் அறையில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் நெருடல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

விராட் கோலியை கட்டியணைத்து போட்டோ எடுத்த நடிகை – கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்திய அணிக்கு ரோகித் சர்மாவையும், டெஸ்ட் அணிக்கு விராட் கோலியையும் கேப்டன்களாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருவருக்கிடையிலான விரிசலால் அணி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவியை கொடுத்து 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தலைசிறந்த அணியை உருவாக்க பிசிசிஐ விரும்புகிறதாம்.

நிர்வாகக்குழு உடன் விராட் கோலி, ரவி சாஸ்திரி, தேர்வுக்குழு தலைவர் ஆகியோர் சந்தித்த பின்னரே இதுகுறித்து தெளிவாகத் தெரியவரும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.