டிஆர்பி ரேட்டிங்கில் இந்த வாரமும் எதிர்நீச்சல் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் எவ்வளவு ரேட்டிங் பெறுகின்றன என்பது குறித்த விவரங்களை பார்க் நிறுவனம் வியாழன் அன்று வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நேற்று வெளியாகியது. கடந்த இரண்டு வாரங்களாக எதிர்நீச்சல் சீரியல் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வரும் நிலையில் இந்த வாரமும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
முதல் 5 இடங்களை பிடித்த சீரியல்கள் இதோ
- எதிர்நீச்சல் – 11.16
- கயல் சீரியல் – 10.88
- சுந்தரி சீரியல் – 9.85
- வானத்தை போல சீரியல் – 9.71
- இனியா – 9.62