
விஜய்யுடன் செம க்யூட்டாக்க திரிஷா போட்டோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஃப்ரீ புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ப்ரீ புக்கிங்கில் ஜெயிலர் பட சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை திரிஷா விஜய்யுடன் செம க்யூட்டாக இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகின்றன.