திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.
Trisha Reply to Priyanka Getup : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா.
மேலும் இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று அந்த நிகழ்ச்சியின் ரன்னராக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 96 ஜானு கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த திரிஷா பாராட்டி கமெண்ட் போட மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்டுள்ளார் பிரியங்கா.
இந்த புகைப்படமும் இவர்கள் மாறி மாறி செய்துகொண்ட கமெண்ட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.