‘அவருடன்’ இணைந்து நடிக்க ஆசை: திரிஷா குறிப்பிடும் நடிகர் யார் தெரியுமா?
முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள திரிஷா, தற்போது தனது விருப்பம் ஒன்றை தெரிவித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இப்படம், ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. இது தவிர தெலுங்கில் ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்துவருகிறார். முன்னதாக, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருந்தார்.
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் மூன்றாவது முறையாக ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்திருக்கிறார் படத்தின் டிரெய்லரிலும் கமலுக்கும் திரிஷாவுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிக்க வைத்தது.
அதேபோல் ‘சுகர் பேபி’ பாடலிலும் திரிஷாவை ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள். எனவே தக் லைஃப் படத்தில் திரிஷாவின் கேரக்டர் என்ன மாதிரியாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
இந்நிலையில், திரிஷாவிடம் நீங்கள் எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, அவர், ‘சந்தேகமே வேண்டாம். பகத் பாசில்தான். அவர் எந்த மாதிரியான ஜானரில் நடித்தாலும் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கண்டிப்பாக, அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை’ என ஆர்வமாய் தெரிவித்திருக்கிறார்.
