Trichy to Rameshwaram Train Testing
Trichy to Rameshwaram Train Testing

Trichy to Rameshwaram Train Testing : திருச்சி ராமேஸ்வரம் இடையே அதிவேக ரயில் இயக்கி, இரும்பு பாதையின் உறுதித் தன்மையை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரும்பு பாதையில் வழக்கமாக ரயில்கள் மணிக்கு 85 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விரைவில் மணிக்கு 110 கிலோ மீட்டர் என்றால் அதிகமாக இயக்கு வகையில் இரும்புப் பாதை சீரமைப்புப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றன. பரமக்குடி, சத்திரக்குடி இடையேயும் ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையையும் நடந்து வந்த ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் அதிவேகமாக செல்லும் விரைவு ரயிலை இயக்கி சோதனை முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி காலை 9 மணிக்கு எஞ்சின் மற்றும் 4 பெட்டிகளுடன் அதிவேக விரைவு ரயில் ஆனது திருச்சியிலிருந்து புறப்பட்டு காரைக்குடி மானாமதுரை பரமக்குடி வழியாக ராமநாதபுரம் வந்த ரயில், பிற்பகல் 12.45 ராமேஸ்வரத்தை அடைந்தது.

பின்னர் அந்த ரயில் பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மீண்டும் திருச்சியில் சென்றடைந்தது. ராமநாதபுரம் பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதால் அப்பகுதியே லேசாக அடைந்ததாக சக்கரக்கோட்டை பகுதியினர் தெரிவித்தனர்.

இந்த பரிசோதனையை தொடர்ந்து ராமநாதபுரம் உள்ளிட்ட இரும்புப் பாதை பகுதியில் ரயில்வே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.