சன் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பிஐ தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அதே சமயம் சீரியலில் நடித்துவரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர் பகுதியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சன் டிவி சீரியல்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்கும் ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. கேப்ரில்லா :
சுந்தரி சீரியல் நடித்து வரும் இவர் முதல் சீசனில் ஒரு எபிசோடு 20,000 என சம்பளம் வாங்கிய நிலையில் இரண்டாவது சீசனுக்கு 40 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார்.
2. சைத்ரா ரெட்டி :
கயல் சீரியலில் நாயகியாக நடித்து வரும் இவர் எபிசோடுக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. ஆல்யா மானசா :
ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்த ஆலியா மானசா இனியா சீரியலில் ஒரு எபிசோடுக்கு ரூபாய் 20000 சம்பளமாக வாங்குவதாக தெரியவந்துள்ளது.
4. மதுமிதா :
அதிக சம்பளம் வாங்கி நடிகைகள் லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா. ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
5. மனீஷா மகேஷ் :
சிங்க பெண்ணே என்ற சீரியல் நடித்து வரும் மனிஷா மகேஷ் ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். இதன் மூலம் அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.