வெங்கட் பிரபுவின் மன்மதலீலை படத்துக்கு வந்துள்ள சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Title Issue for Manmadha Leelai Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை தொடர்ந்து அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபுவின் மன்மதலீலை படத்துக்கு வந்த சிக்கல்.. பரபரப்பு அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் டைட்டில் ஆன மன்மத லீலை என்ற பெயரில் இந்த படம் உருவாகி வருகிறது.

நான் அஜித் மாதிரி இருப்பேன்.., Sema கடுப்பாகி அரை விட்ட மனைவி 😡 | Amurtha | Abishek | Velavan Stores

வெங்கட் பிரபுவின் மன்மதலீலை படத்துக்கு வந்த சிக்கல்.. பரபரப்பு அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய அணியின் ஆட்டம் சரியில்லை : கோச்சர் டிராவிட் ஒப்புதல்

இந்த நிலையில் தற்போது கே பாலச்சந்தர் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் கவிதாலயா பாபு என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து டைட்டிலை பயன்படுத்த எந்தவித அனுமதியும் வாங்காமல் வெங்கட்பிரபு பயன்படுத்தியிருப்பது தவறான செயலாகும்.

ஒன்று முறையாக பேசி டைட்டிலை பயன்படுத்த அனுமதி வாங்கப்படும். அப்படி செய்யவில்லை என்றால் சட்டரீதியாக வழக்கு தொடருவோம் என கூறியுள்ளார். இதனால் மன்மதலீலை டைட்டிலை பயன்படுத்துவதில் வெங்கட்பிரபு குழுவினருக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
‌‌‌‌