Thupparivaalan 2 Director
விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் இருந்து மிஸ்கின் நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thupparivaalan 2 Director : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின், இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் துப்பறிவாளன்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது, மிஸ்கின் இயக்க விஷாலே இப்படத்தை தயாரித்து நடித்து வந்தார்.

டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த விஷால் பட நடிகை – சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்.!

இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் நடந்து வந்த நிலையில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் படஜெட் தற்போதே ஓவராகி விட்டதாகவும் இனி பைனான்சியர்கள் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால் மிஷ்கினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஷால் மிஷ்கினை இப்படத்தில் இருந்து நீக்கி விட்டாராம்.

இயக்குனர் மிஷ்கின் இல்லை என்றால் இப்படத்தை வேறு யார் இயங்குவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் விஷாலே இப்படத்தின் மீதியை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் இயக்க போகும் முதல் படமும் இது தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.