ஒரே போஸ்டரில் துணிவு & வாரிசு படங்களின் இணைத்து ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதியான நாளை வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ மற்றும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகி நேருக்கு நேராக மோத உள்ளது.

இதனால் தல தளபதி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இரு படங்கள் குறித்த போஸ்டர்கள் மற்றும் ஸ்பெஷல் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தல – தளபதி ரசிகர்கள் சார்பாக இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து திண்டுக்கல்லில் வாரிசு & துணிவு ஆகிய இரண்டு படங்களுக்கான போஸ்டர்களையும் ஒன்றாக இணைத்து வித்தியாசமான போஸ்டரை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.