துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு ‌

அஜித்துடன் சமுத்திரகனி, மஞ்சு வாரியர், சிபிச்சந்திரன் உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் பாடலாக ஜில்லா ஜில்லா என்ற பாடல் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு ‌

இந்த நிலையில் தற்போது இந்த பாடல் வரும் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் பாடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.