துணிவு திரைப்படத்தில் இல்லாத 33 தீம் மியூசிக் விரைவில் வெளியாக உள்ளதாக ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

அல்டிமேட் ஸ்டார் தல அஜித் குமாரின் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பேங்க் கொள்ளைகளை மையமாகக் கொண்டு உருவாகி இருக்க துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியானது. ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

துணிவு படத்தில் இடம்பெறாத 33 தீம் மியூசிக்!!… ஜிப்ரான் வெளியிட்ட ட்ராக்லஸ்ட் வைரல்.!

ஜிப்ரான் இசையமைப்பில் வெளியாகியிருந்த இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை ஜிப்ரான் பகிர்ந்திருக்கிறார். அதன்படி, இப்படத்தில் இடம்பெறாத 33 தீம் மியூசிக் விரைவில் வெளியாக உள்ளதாக ஜிப்ரான் ட்ராக் லிஸ்டுடன் பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். இது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.