கோபிக்கு ராதிகா செக்மேட் வைக்க பொங்கி எழுந்துள்ளார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மொட்டை மாடியில் செல்வி உனக்கு உண்மையாகவே வருத்தமாகவே இல்லையா என்று பாக்கியாவிடம் கேள்வி கேட்கிறார். என் செல்வி உனக்கு நான் வருத்தப்படணுமா என்று பாக்கியா கேட்க செல்வி என்னைக்கும் நீ வருத்தப்பட கூடாதுன்னு நினைக்கிறேன் முதல் ஆள் நான்தான் என சொல்கிறார்.

Oplus_0

பிறகு பாக்கியா கோபி எப்பவும் என்னை பிடிக்கலன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு, நான் மேக்கப் பண்றது பிடிக்காது பவுடர் அடிக்கிறது பிடிக்காது நான் என்ன பண்ணாலும் அவருக்கு பிடிக்காது காரணம் அவருக்கு என்னை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. நான் சரியான அம்மாவா இல்லைன்னு சொல்லுவாரு, இன்னைக்கு அவர் பண்ணியிருக்க விஷயத்தை எல்லாம் பார்க்கும்போது அருவருப்பா இருக்கு. அவர விவாகரத்து பண்றது தான் நான் செஞ்ச சரியான விஷயம் என்று சொல்கிறார். இனிமே அவர் பேசுறதுக்கெல்லாம் அமைதியா இருக்க மாட்டேன் என பொங்குகிறார்.

அதை தொடர்ந்து ஈஸ்வரி தூக்கம் வராமல் தவிக்க ராமமூர்த்தி என்னாச்சுன்னு கேட்க ஒன்னும் இல்ல சாப்பிட்டது ஏதோ செரிக்கல என்று தண்ணீர் குடிக்க வெளியே வருகிறார். கோபியும் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரிய பார்த்ததும் இன்னும் நீங்க தூங்கலையா என்று கேட்க நீ சொன்ன விஷயத்தை கேட்டு எப்படி தூக்கம் வரும் என்று கோபப்படுகிறார்.

Oplus_0

ராதிகா ஏண்டா இப்படி இருக்க சொல்றத கேட்கவே மாட்றா, இதெல்லாம் உன் பசங்களுக்கு தெரிஞ்சா உனக்கு மரியாதையே இருக்காது என்று சொல்ல கோபி நீங்க இப்படி சொல்றீங்க ஆனா அவ எல்லாருக்கும் கர்ப்பமா இருக்கேனு சொல்லணும்னு சொல்றா நான் என்னதான் செய்வது நெஞ்சு வெடிச்சு செத்துருவேன் போல இருக்கு என்று வருத்தப்படுகிறார். நானும் இந்த குழந்தை வேண்டாம் என்று தான் சொன்னேன் ஆனா அவ கேட்கல என சொல்லி கண் கலங்குகிறார்.

பிறகு ஏன்டா கோபி இப்படி பேசுற சரி விடு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார். மறுநாள் காலையில் கோபி தூங்காமல் ராதிகா பக்கத்தில் உட்கார்ந்து இருக்க ராதிகா வாக்கிங் போகலையா என்று கேட்க டயர்டா இருக்கு அதனால போகல என்று சொல்கிறார்.

திரும்பவும் குழந்தை பற்றிய பேச்சு வர உங்க வீட்ல எப்ப சொல்ல போறீங்க என்று ராதிகா கேட்க சொல்ற என்று சொல்லு எப்ப உங்க அம்மா ஏதாவது பண்ண பிறகா என்று கேட்கிறார். கோபி எங்க அம்மா என்ன பண்ண போறாங்க என கேட்க அவங்களுக்கு தான் இந்த குழந்தை பொறக்கிறது பிடிக்கலையே சினிமால வர மாதிரி ஏதாவது கலந்து கொடுத்து கலச்சிட்டாங்கன்னா என்று பேச கோபி அதிர்ச்சி அடைகிறார்.

ரொம்ப டூ மச்சா பேசுற என்று கோபப்பட நான் உண்மையத்தான் சொல்றேன். உங்க அம்மா அப்படி பண்ணாலும் பண்ணுவாங்க என்று ராதிகா திரும்ப திரும்ப கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. உனக்கும் நம்ம குழந்தைக்கும் எதுவும் ஆகாது நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார்.

பிறகு கோபி அங்கிருந்து எழுந்து செல்ல ராதிகா எங்கன்னு கேட்க வாக்கிங் போறேன் என்று சொல்கிறார். டயர்டா இருக்குன்னு சொன்னீங்க என்று கேட்க எல்லாம் சரியாயிடுச்சு. அதான் வார்த்தையா பேசி கொட்டிட்டியே இப்ப எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க வாக்கிங் போயிட்டு வந்தது எல்லாரையும் வச்சு உண்மையை போட்டு உடைக்கிறேன் போதுமா என கிளம்பிச் செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.