துணிவு திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது.

கோலிவுட்டில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து வெளியான எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி தல ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியீட்டு குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி “காசேதான் கடவுளடா” என்கின்ற இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.