Three Vijay TV serials ending with Bigg Boss
Three Vijay TV serials ending with Bigg Boss

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் 3 விஜய் டிவி சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருகிறது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக இந்த சேனலுக்கு இன்னும் அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்த நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக மூன்று சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நாயகன் நாயகிக்கு இந்த வாரம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் நந்தா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியலும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் விரைவில் இந்த சீரியலும் முடிவுக்கு வர உள்ளது.

இரவு நேரத்தை பொறுத்தவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிளைமாக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த சீரியலும் முடிவுக்கு வந்து அடுத்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து மூன்று சீரியல் கல் முடிவுக்கு வர இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.