என்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான படம் இதுதான்.. ஜெயம் ரவி ஓபன் டாக்..!
சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படம் குறித்து பேசி உள்ளார் ஜெயம் ரவி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி.இவர் தமிழில் ஜெயம் ,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வரும் நடிகர்களின் ஒருவராக ஜெயம் ரவி இருந்த வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள படங்களில் அவருடைய பேவரைட் படம் எது என்று கூறியுள்ளார்.
அதில், பேராண்மை படம் மிகவும் சிறப்பானது என்றும் என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம் பேராண்மை. நம்மால் இதை செய்ய முடியும் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் என்று உணர்த்தியதும் இந்தப் படம் தான் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.