பிகில் ரூ 300 கோடி வசூல் என்பதெல்லாம் பொய் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் முக்கிய விநியோகிஸ்தர் ஒருவர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் நல்ல வசூல் பெற்று வருவதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.
இப்படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த விநியோகிஸ்தர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிகில் ரூ 300 கோடி வசூல் என்பதெல்லாம் உண்மை இல்லை.
எனக்கு தெரிந்த வரை இப்படம் தமிழகத்தில் ரூ 130 கோடி தான் வசூல் செய்துள்ளது என கூறியுள்ளார். ஸ்ரீதரின் இந்த பேச்சுக்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
ஆனால் எது உண்மை என்பது தயாரிப்பு நிறுவனம் தான் ஆதாரங்களுடன் அறிவிக்க வேண்டும். ஆனால் அது நடக்கணும்ல.!