Theri Baby Nainika Photos

தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்த நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Theri Baby Nainika Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தெறி. தளபதி விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வந்த இந்த திரைப்படத்தின் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருப்பார்.

தெறி படத்தில் நைனிகாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நைனிகாவா இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.