Theendaathe Short Film
Theendaathe Short Film

ஏலக்காய் எஸ்டேட்டில் கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார்.

Theendaathe Short Film : சினிமாவில் பெரிய நடிகராக, இயக்குனராக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. இன்றைய சினிமாவில் உச்சம் தொட்டுள்ள ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் கூட சாதாரண குடும்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகளே.

இவர்களைப் போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறி ஏழைகள் பலருக்கும் இன்னும் உள்ளது. ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் அமைவதில்லை.

அந்த வகையில் தற்போது ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியும் மலைவாழ் கிராமத்தைச் சார்ந்த ராஜபாண்டியன் என்பவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார்.

விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?? – டாக்டர் இயக்குனர் வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!

அந்த குறும்படங்கள் தீண்டாதே, பிணம் தின்னி கழுகு என்ற பெயரில் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் சினிமாவில் உயர நிச்சயம் மக்களின் ஆதரவு தேவை என்பதால் அவர் தன்னுடைய குறும்படங்களை பார்த்து தங்களது விமர்சனங்களை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

மக்களின் விமர்சனமே தன்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதில் அந்த கலைஞர் உறுதியாக உள்ளார். அவர் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனராக ஜெயிக்க கலக்கல் சினிமா மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

YouTube video

 

YouTube video