
தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மலையாள சினிமாவில் வெளியாகி வெற்றியைப் பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

கண்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு கம்யூரோட்டில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார்.
படத்தின் கதைக்களம் :
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிந்திரனுக்கு திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து ஐஸ்வர்யா ராஜேஷ் புகுந்த வீட்டுக்கு வரும் போது அவரது மாமியார் மகளின் பிரசவத்திற்காக ஊருக்கு சென்று விட குடும்ப பொறுப்பு அனைத்தையும் பார்க்கும் சூழல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்படுகிறது. கணவருக்கு ஒரு விதமான சாப்பாடு மாமனாருக்கு ஒரு விதமான சாப்பாடு என அவரது வாழ்க்கை முழுவதும் கிட்சனிலயே ஓடுகிறது. பெண்கள் என்றால் சமைத்து குடும்பத்தை பார்த்துக் கொண்டால் போதும் என மாமனார், கணவர் என இருவரும் கருதுகின்றனர்.
ஆனால் கிச்சன் வாழ்க்கையை வெறுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து என்ன முடிவு எடுக்கிறார் அவரது வாழ்க்கையில் நடந்த மாற்றம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :
மலையாளத்தில் போட்டியில் வெளியான படத்தை ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் மட்டுமே வைத்து திரைப்படமாக திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். மலையாள வெர்ஷன் கதை களத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ் சினிமாவிற்கு ஏற்ற பல மாற்றங்களை செய்து கச்சிதமாக கொடுத்துள்ளார் கண்ணன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் எதார்த்தமான நடிப்பால் ஸ்கோர் செய்ய படத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் அவர்களின் வேலைகளை அழகாக செய்துள்ளனர். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார் யோகி பாபு.
படத்தில் ஒளிப்பதிவும் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. தமிழுக்கு ஏற்றார் போல மாற்றங்கள் செய்த காரணத்தினால் சில இடங்களில் சில காட்சிகள் தவறுகள் தென்படுகிறது.