The fourth single released from the movie Goat
The fourth single released from the movie Goat

கோட் படத்திலிருந்து நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் சுரேஷ், கல்பாத்தி எஸ் கணேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோர்ட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு ,பார்வதி நாயர், விடிவி கணேஷ், சினேகா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் நான்காவது சிங்கிள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் பாடலை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

YouTube video