குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடுவராக செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மணிமேகலை இருந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் அவர் நேற்று ஒரு பதிவை வெளியிட்டு அதில் குக்காக பங்கேற்றிருக்கும் ஒரு தொகுப்பாளர் என் வேலையை செய்ய விடாமல் மன உளைச்சல் செய்வதாகவும் அதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாகவும் பதிவை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் பைனல் நடந்து முடிந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முக்கிய குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை பிரியங்கா ஜெய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.