தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போவது யார் எனத் தெரியவந்துள்ளது.

Thalapathy67 Villian Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அளித்திருந்த பேட்டி ஒன்றில் மீண்டும் விஜய்யுடன் இணையும் படத்தில் ஹீரோயின் கிடையாது, பாடல்கள் கிடையாது மேலும் விஜய் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசைப்படுகிறார். அதனால் அப்படி ஒரு கதையை ரெடி பண்ணிவிட்டு அவரை சந்திப்பேன் என கூறியிருந்தார்.

இதனால் விஜய், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.