Thalapathy65 First Schedule Shooting Update

தளபதி 65 படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy65 First Schedule Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வந்தன.

தளபதி 65 குறித்து வெளியான சூப்பர் தகவல்.. சென்னை வந்தடைந்த விஜய்.!!

இங்கு படத்தின் பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் நடைபெற்றதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்புகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் படக்குழு மற்றும் தளபதி விஜய் சென்னை வந்தடைந்தனர்.

இந்த தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது. வரும் ஜூன் 22-ம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் விருந்தாக தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.