தளபதி விஜய்யின் தவெக மாநாடு: இதோ, பரபரப்பான சில நிகழ்வுகள்

தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிபோதையில் வந்தால் உள்ளே அனுமதிக்கக்கூடாது என நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று லீவு விடப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகளை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகமே உத்தரவு பிறப்பித்துள்ளது.

* மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிப்பதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி தவெக மாநாடு நடைபெறும் திடல் அருகே காலை முதல் பீடி, சிக்ரெட் போன்ற பொருட்களை சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

* தவெக மாநாடு நடைபெறும் பகுதி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை சரிபடுத்தும் பணியில் தன்னார்வலர்களும் காவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

* வெள்ளை நிற சட்டை அணிந்து, தனக்கே உரித்தான வேகத்தில் மேடையில் துள்ளி குதித்து ஓடி வந்த தளபதி விஜய், சுமார் 800 மீட்டருக்கு போடப்பட்டிருக்கும் ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

அப்போது, கட்சி கொடியின் நிறத்தில் தொண்டர்கள் வைத்திருந்த துண்டுகளை அவர் மீது வீச, அதை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோளில் போட்டுகொண்டு ஜோராக வீரநடை போட்டுள்ளார் தளபதி விஜய், அப்போது கூட்டத்தில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அளித்த ராணுவ மரியாதையை ஏற்றுக்கொன்று தொடர்ந்து மிடுக்கான நடைபோட்டர் தளபதி விஜய்.

* இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் டிவி; பிரியங்கா தேஷ்பாண்டேவும், மாகாபா ஆனந்தும் தான் இந்த தவெக மாநாட்டை தொகுத்து வழங்க உள்ளார்கள்.