நாளை, தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாடு: தலைவர்களின் கட்அவுட்ஸ் செம வைரல்..
‘நீ நதிபோல ஓடிக்கொண்டிரு, எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய்.
ஆம்.. தவெக முதல் மாநாடு நாளை நடைபெறுகிறது. பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருக்கும் மாநாட்டில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் போஸ்டர்களும், குறிப்பாக இரண்டு பெண் தலைவர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அது குறித்து வைரலாகும் நிகழ்வை பார்ப்போம் வாங்க..
திரையுலகில் உச்சபட்ச நடிகராக இருக்கின்ற நேரத்தில், தனது அரசியல் கட்சியை தமிழக மக்களுக்கு தளபதி விஜய் அறிவித்திருக்கிறார். தன்னுடைய சினிமா பயணத்திற்கு அவர் முழு ஓய்வு கொடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இந்த ஒரு விஷயம் தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காகவே பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. ஒரு மிகச்சிறந்த அரசியல் தலைவராக அவர் தமிழகத்தில் வலம் வருவார் என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் தளபதி விஜய் கட்சி தொடங்கியது குறித்து பேசிய பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி,
‘நடிகர் விஜய் ஒன்றும் திரையுலகில் மார்க்கெட் போன பிறகு, அரசியலுக்கு வரவில்லை. இப்போதும் அவர் ஓகே என்று சொன்னால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை வைத்து திரைப்படம் எடுக்க மிகவும் ஆவலாக இருந்து வருகின்றனர்.
ஆனால், இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக தளபதி விஜய் இருந்து வரும் இந்த சூழலில் தான், கலையுலகை விட்டுவிட்டு, மக்கள் பணிக்காக அரசியலுக்கு செல்கிறார்.நிச்சயம் அவருக்கு நான் உறுதுணையாக நிற்பேன்’ என்று பேசியிருந்தார்.
இந்த சூழலில் நாளை ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் தேதி தளபதி விஜய்யின் முதல் மாநில மாநாடு நடக்க உள்ளது.
விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நாளை மறுநாள் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், மாநாட்டில் இடம்பெற்றுள்ள 70 அடி கட்டவுட் ஒன்று பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது என்றே கூறலாம்.
காரணம் இந்த போஸ்டரில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்களுடைய போஸ்டர்களுக்கு மத்தியில் இரண்டு முக்கிய பெண் தலைவர்களின் போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காந்தியால் ஜான்சி ராணி என்று அன்போடு அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாள் அவர்களின் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல பெண்களின் முக்கியமானவர் அஞ்சலை அம்மாள். கடலூரில் பிறந்து இந்திய விடுதலைக்காக சுமார் 7.5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் அவர்.
அது மட்டும் இல்லாமல், வீரத்திற்கு பெயர் பெற்ற வேலு நாச்சியாரின் போஸ்டரும் இந்த கட்அவுடில் இடம் பெற்று இருக்கிறது.
1730 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த இவர், 1796 ஆம் ஆண்டு தன்னுடைய 66 வது வயதில் சிவகங்கையில் காலமானார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடன் போராடிய பல வீர மங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் வேலு நாச்சியார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிவகங்கை ராணி என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இவர்கள் இருவரின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆம், நல்லெண்ணமே நற்செயலாகிறது. நற்செயலே வெற்றியாகிறது. வாழ்த்துகள்.!