வாரிசு கெட்டப்பில் திருமண நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் குஷ்பூ சங்கீதா சம்யுக்தா ஜெயசுதா என பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து தற்போது வரை ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி என இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இப்படியான நிலையில் தற்போது வாரிசு பாடகட்டத்தில் தளபதி விஜய் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.