தளபதி விஜயின் அழகான குடும்ப புகைப்படம் இதோ.. குவியும் லைக்ஸ்..!

தளபதி விஜய் தனது அழகான குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் மேனன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது விஜய்,மனைவி மற்றும் அவர்களது மகள்,மகனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

