Thalapathi Vijay

Thalapathy Vijay : விஜய் அப்படியானவர் இல்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார்கள் என பிரபல நடிகர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடன் சேர்ந்த நடித்த நடிகர் நடிகைகள் பலரும் விஜயின் குணத்தை பாராட்டி தான் பேசி வருகின்றனர்.

விஜய் கொஞ்சமும் மாறவே இல்ல – ரசிகர்கள் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

இந்நிலையில் தற்போது லொள்ளு சபா ஸ்வாமிநாதன் வேலாயுதம் படப்பிடிப்பில் விஜயுடன் நடந்த உரையாடலை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நான் முதல் முதலாக விஜய் சாரை வேலாயுதம் படப்பிடிப்பில் தான் சந்தித்தேன். நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் அங்கிருந்தவர்கள் விஜய் அமைதியான மனிதர். அவரை சந்தித்து வணக்கம் எல்லாம் சொல்ல கூடாது என ஆளாளுக்கு கூறினார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரே வந்தார். பெரிய நடிகர் என்பதால் வணக்கம் சொல்லாமல் விட்டால் தவறாக நினைந்து கொள்வாரோ என்ற அச்சத்தில் வணக்கம் கூறினேன்.

அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்து விட்டு என்னையும் என் குடும்பத்தாரை பற்றியும் நலம் விசாரித்து சென்றார் என கூறினார்.

மேலும் என் மகன் உங்களது ரசிகர் என கூறியதற்கு ஒ அப்படியா எனவும் கூறினார். அதே போல் என்னுடைய மகள் அஜித் ரசிகை என கூறியதற்கும் ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் என சிரித்து கொண்டே கூறினார் எனவும் பேசியுள்ளார்.

வசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா?

அப்போது தான் நான் தெரிந்து கொண்டேன். விஜயை சுற்றி இருப்பவர்கள் தான் அவரை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.