Thalapathy Vijay Attend Marriage Function in Lockdown
Thalapathy Vijay Attend Marriage Function in Lockdown

நான்கு மாதங்களுக்குப் பிறகு தளபதி விஜய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay Attend Marriage Function in Lockdown : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். ஊரடங்கு காரணமாக இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது.

தளபதி விஜய்யும் கடந்த நான்கு மாதங்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் முதன் முறையாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் கடைசி 10 படங்களின் வசூல் என்ன? முழு விவரம்..!

மாஸ்டர் படத்தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகளுக்கும் மறைந்த நடிகர் முரளியின் மகன் மற்றும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ்க்கும் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சாந்தோம் சர்ச்சில் திருமணம் நடைபெற உள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ள இந்த திருமண விழாவில் தளபதி விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விஷயம் அறிந்த விஜய் ரசிகர்கள் சாந்தோம் சர்ச் அருகே கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.