Thalapathy Vijay

Thalapathy Vijay : தளபதி விஜயின் சாதனையை முறியடித்து அவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார் பிரபல நடிகரான தனுஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் இவர் நடித்து வெளியாகி இருந்த படம் மெர்சல்.

படமும் சரி இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் சரி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இருந்தது.

புதிய சாதனை படைத்த தளபதி – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்.!

குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடலை கொண்டாடாத ரசிகர்களே இல்லை. பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் பட்டய கிளப்பியது.

இதனால் யூ ட்யூபிலும் 91 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது தனுஷின் பாடலாம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆம், தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் 95 மில்லியன் பார்வையாளர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

தனுஷை தொடர்ந்து களமிறங்கும் தளபதி – விஜய் 63 அப்டேட்.!

இதனால் தளபதி விஜயின் சாதனை முறியடிக்கப்பட்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.