ஐந்து வருடங்களுக்குப் பிறகு விஜய் பட ரிலீஸில் நடக்கும் விஷயம் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு‌.

இதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்குப் பிறகு தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி அந்த நிலையில் படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியான நிலையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு விஜய் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.