பீஸ்ட் பட ரிலீசுக்கு முன்பாகவே விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சூப்பர் கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

Thalapathy 66 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றி சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.