விஜய் 66 படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Thalapathy 66 Movie Villian Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த விவேக் ஓப்ராய் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.