விஜய் வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Movie Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜயை வைத்து 3 படம் இயக்கியும் அட்லிக்கு வந்த சோதனை?? – வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக தளபதி 66 என்ற படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி சேர உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்தப்படம் கருட புராணம் என்ற கதையில் ஒரு கதாபாத்திரத்தை தழுவி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தளபதி விஜய்க்கு வில்லத்தனம் கலந்த ஹீரோ வேடம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாகவே தளபதி ரசிகர்கள் கருடன் என்ற பெயரில் புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கோலிவுட் வட்டாரங்களில் கசிந்த இந்த தகவலை வைத்து விஜய் ரசிகர்கள் இப்படியான கொண்டாட்டத்தில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.