Vijay 65
தளபதி 65 படத்தை இயக்க போவது யார் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள மிக பெரிய கேள்வியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடன் இணைவார்? அந்த படத்தின் இயக்குனர் யார்? என்பது பற்றி எதிர்பார்ப்பு எக்கசக்கசமாக இருந்து வந்தது.

ஏற்கனவே இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக அதிரடியான தகவல்கள் கசிந்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் யார் என்பது பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

ரசிகர் ஒருவர் ஜெகதீஸ் என்பவரிடம் பேசியதாகவும் அவர் அனிருத் இசையில் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருப்பதாகவும் கூறி ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இது உண்மை இல்ல.

கிட்டத்தட்ட 90% முருகதாஸ் தான் தளபதி 65 இயக்குனராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது துப்பாக்கி 2 கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏனெனில் இப்படம் பிரம்மாண்ட படமாக உருவாக உள்ளதாம். விஜயின் அடுத்த படத்தை இயக்கலாம் என கூறப்பட்டு வரும் ஷங்கர் தற்போது இந்தியன் 2-ல் பிஸியாக இருக்கிறார்.

அட்லீ பாலிவுட் படம் இயக்க திட்டமிட்டு வருகிறார். அதனால் அவருக்கும் வாய்ப்பு இல்லை. பேரரசு கதை கூறியுள்ளார். ஆனால் விஜய் அந்த கதைக்கு இன்னும் பச்சை கோடி காட்டவில்லை.

மேலும் மகிழ் திருமேனி உதயநிதியை வைத்து படம் இயக்க ஏற்கனவே கமிட்டாகி விட்டார் அதனால் அவருக்கும் தற்போதைய விஜயை இயக்க வாய்ப்பு கிடையாது. வெற்றிமாறனும் சூர்யாவுடன் கை கோர்த்து விட்டார்.

மேலும் முருகதாஸ் தான் தர்பார் படம் முடித்து விட்டு அடுத்த படத்திற்கு தயாராக இருக்கிறார் என்பதால் நிச்சயம் தளபதி 65 முருகதாஸ் படமாக தான் இருக்கும் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தளபதி 65 இயக்குனர் யாரா இருக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்க?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.