Vijay 65 Shooting Spot

தளபதி 65 படத்தின் சூட்டிங் தொடங்கிவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Thalapathy 65 Shooting Spot Stills : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி கொண்டதை தொடர்ந்து தளபதி 65 என்ற பெயரிடாத திரைப்படம் உருவாகி வருகிறது.

கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் பூஜைகள் கடந்த வாரம் நடந்து முடிந்த ஜார்ஜியாவில் படப்பிடிப்பிற்கான வேலைகள் நடைபெற்று வந்தன.

தளபதி விஜயின் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட்டதைத் தொடர்ந்து அடுத்த நாளே ஜார்ஜியாவிற்கு பறந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன‌.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் இணைந்து நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.