Thalapathy 65 Shooting Issue

தளபதி 65 படப்பிடிப்புக்கு வந்த சிக்கலால் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Thalapathy 65 Shooting Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்னர் நடந்ததை தொடர்ந்து தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

தளபதி 65 படப்பிடிப்புக்கு வந்த சிக்கல் - ஷூட்டிங் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே இப்படியா??

இங்கு தற்போது அடிக்கடி கடுமையான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் படக்குழுவும் என்ன செய்யலாம் என யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.