Vijay 65
தளபதி 65 இயக்குனரில் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை இயக்கலாம் என்ற பட்டியலில் பேரரசு, முருகதாஸ், மகிழ்திருமேனி, வெற்றிமாறன் மற்றும் பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

பேரரசு படம் என்றால் எமோஷனல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த மசாலாவாக இருக்கும் என்பதால் சன் பிக்சர்ஸ் பேரரசுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.