Thalapathy 65 Movie Director Update

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய் தன்னுடைய மாஸ் ட்ராக்கிலிருந்து மாறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Movie Director Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தளபதி விஜய்யும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் தயாரிப்பில் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் படத்திலிருந்து முருகதாஸ் விலகிக் கொண்டார்.

Thalapathy 65 Movie Director Update

இதனையடுத்து தளபதி 65 படத்தை மகிழ்திருமேனி, பேரரசு ஆகியோர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலமாக மாஸான கதைகளில் மட்டுமே நடித்து வரும் விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய ட்ராக்கை மாற்ற இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தைத் அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.