Thalapathy 64

Thalapathy 64 : மணிரத்தினம் படத்தின் அடுத்த படம் பற்றியும் அதன் ஹீரோயின் குறித்த தகவலும் விஜய், சிம்பு, விக்ரம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஹிட் இயக்குநர்களில் ஒருவர் மணிரத்தினம். மல்டி ஸ்டார் படம் இயக்குவதில் திறமை வாய்ந்தவர்.

தளபதி 63 படத்தில் பிரபல நடிகரின் மகள், கூடவே இவருமா? – பிரபல நடிகர் அதிரடி அறிவிப்பு.!

இவர் சமீபத்தில் இயக்கி இருந்த செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் நாவலை தழுவிய வரலாற்று படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் இந்த படத்தில் விஜய், சிம்பு, விக்ரம் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தது. இதனால் சம்மந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் அவர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. காரணம் மணிரத்தினம் தன்னுடைய அடுத்த படமாக ஜி.வி பிரகாஷை வைத்து எடுக்க உள்ளாராம்.

தளபதி 63 படம் இப்படி தான் இருக்குமாம் – வெளியான அதிரடி அப்டேட்.!

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு விஜய், சிம்பு, விக்ரமை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படியான தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.