Thalapathy 63 Info

Vijay 63 Info : தளபதி 63 படம் எப்படி இருக்கும் என்பதை குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் படத்தை பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் கனா படத்தை போல இது பெண்களை மையமாக கொண்டாட ஸ்போர்ட்ஸ் படம் என கூறப்படுகிறது.

மேலும் நயன்தாரா இந்த படத்தில் தடகள போட்டியாளராக நடிக்க இருப்பதாகவும் விஜய் கோச்சரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது இப்படத்தில் நடிப்பதற்கான மற்ற நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வித்தியாசமான கதையாக இருப்பதால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வழக்கம் போல் சில நெட்டிசன்கள் அப்போ இது கனா படத்தின் காப்பியா என கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.