Thalapathy 63 Villian

Thalapathy 63 Villain : தளபதி 63 படத்தில் மூன்று வில்லன் நடிகர்கள் நடிக்க உள்ளனர். அது குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார்.

தனுஷை தொடர்ந்து களமிறங்கும் தளபதி – விஜய் 63 அப்டேட்.!

இந்த படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது, நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது.

தளபதி 63 படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க கதிர், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

மேலும் இப்படத்தின் வில்லன்களாக ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா ஆகியோர்கள் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விஜயை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகர் – என்ன இப்படி ஆகிடுச்சே.!

இதனை உறுதி செய்யும் விதமாக இந்த மூன்று பேரும் நேற்று நடந்த படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.