Thalapathy-63 Villian

Thalapathy 63 Villian : தளபதி 63 படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் விதமாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் AGS சினிமாஸ் நிறுவனத்தின் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

பர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத நிலையில் விற்று தீர்ந்த சாட்டிலைட் ரைட்ஸ் – தளபதி 63 மெகா அப்டேட்.!

நயன்தாரா, கதிர், யோகி பாபு, ஆனந்த ராஜ், விவேக், டேனியல் பாலாஜி மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இவர்களை தொடர்ந்து தற்போது இப்படத்தின் மெயின் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி செராப் அவர்கள் கமிட்டாகியுள்ளார்.

இதனை தயாரிப்பாளரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனவே தமிழில் ஆரண்ய காண்டம், மாயம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.