Thalapathy-63

Thalapathy 63 Rights : தளபதி 63 படத்தை பிரபல சேனல் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

AGS நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ் மற்றும் பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

ஆம், இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை. அதற்குள் இப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்று தீர்ந்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.