Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

விஜய் சேதுபதி கைவிட்ட இயக்குனரை கெட்டியாக பிடித்துகொண்ட ஜெயம்ரவி – யார் தெரியுமா?

இவர்கள் போக தற்போது இன்னொரு நடிகையும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

Varsha Bollamma

வெற்றிவேல், 96 ஆகிய படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மாதான் அவர். இவர் இப்படத்தில் விஜய் அணியின் வீராங்கனையாக நடிக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தகக்து.

மீண்டும் கெட்டவனாகும் சிம்பு – இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தை குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா நாடியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.