Thalapathy 63

Vijay 63 Movie :

தளபதி விஜய் நடிக்க உள்ள படத்தில் 16 நடிகைகள் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதே சமயம் விஜய் ரோல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

ஸ்போர்ட்ஸ் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் தளபதி விஜய் கோச்சாராக நடிக்க உள்ளாராம்.

மேலும் இது கால் பந்து விளையாட்டை மையமாக கொண்ட படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் மொத்தம் 16 இளம் பெண்கள் நடிகையாக அறிமுகமாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதே தீபாவளி ரிலீஸ் என அறிவித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.